யாதும் ஊரே யாவரும் கேளிர்.

பிரஹ்லாத் ஹர்ஷா

प्रह्लाद हर्षा / प्रल्हाद हर्ष / Prahladh Harsha

தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் பள்ளி
டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், மும்பை
ஹோமி பாபா சாலை, மும்பை 400005, இந்தியா
தொலைபேசி: +91-22-2278 2129
மின்னஞ்சல்: prahladhspamfilter@tifr.res.in

டி.ஐ.எப்.ஆர். புகைப்படம் (2021)

நான் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் (டி.ஐ.எப்.ஆர்.), மும்பையின் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் பள்ளியின் (எஸ்.டி.ஸி.எஸ்.) ஆசிரியர் குழு உறுப்பினராக இருக்கிறேன்.

இதற்கு முன், நான் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.)யில் பட்டதாரி மாணவராக பணிபுரிந்தேன், அங்கே பேராசிரியர் மது சூதனின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றேன்; மைக்ரோசாப்ட் ஆய்வு-சிலிக்கான் பள்ளத்தாக்கில் முனைவர் பட்டமேற்பு ஆராய்ச்சியாளராக; மற்றும் டொயோட்டா தொழில்நுட்ப நிறுவனம், சிகாகோவில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணிபுரிந்தேன்.

தற்போதைய கற்பித்தல் (ஜனவரி-மே 2026): நிகழ்தகவு நிரூபண அமைப்புகள்
ஐ.ஸி.எம். துணை மாநாடு (24-28 ஆகஸ்ட்): ஸ்பெக்ட்ரல் கோட்பாடு, உயர்பரிமாண விரிவாக்கம் மற்றும் போலி சமவாய்ப்பு